அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர்கள் இருந்தால்
அரசியல் சார்பு அமைப்புகளில் மாணவர்கள் இருந்தால் கல்லூரியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்தி கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகளை பறிப்பது போல் இந்த முடிவு அமைந்துள்ளது.
கல்லூரி காலத்தில் அரசியல் அமைப்புகளில் இருந்த எத்தனையோ மாணவர்கள் பிற்காலத்தில் பெரிய மக்கள் தலைவர்களாக உருவாகியுள்ளனர். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை பல்கலைகழகம் உணரவேண்டும். பல அரசியல் மேதைகளும் தலைவர்களும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்து பணியாற்றி தேசத்தை முன்னேற்ற வேண்டும் என்று கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே அரசியல் என்பது நமக்கானது அல்ல, அது ஊழல் நிறைந்த இடம் என்ற தப்பான எண்ணம் பெரும்பான்மை மாணவர்களிடம் உள்ளது. அவர்களுக்கு அரசியல் பற்றிய போதிய புரிதலை ஏற்படுத்துவதும் பல்கலை கழகங்களின் கடமை.
அதைவிடுத்து அரசியலில் இருந்தால் நீக்கம் என்ற அறிக்கை மேலும் குழப்பத்தை விளைவிக்கும்.
ஒரு கல்லூரியில் இதற்கான படிவம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யுமாறும் கூறியுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் அரசியல் மற்றும் சமுதாய பெரியோர்களின்
விருப்பப்படி மாணவர்கள் அரசியல் சார்பு அமைப்புகளில் இருக்க கூடாது என்ற சுற்றறிக்கையை சென்னை பல்கலைகழகம் உடனே திரும்பப்பெற வேண்டுமென இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!