இந்து இளைஞர் முன்னணி
மணிப்பூர் பிரச்சனைகளை மையப்படுத்தி மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தும் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு இந்து இளைஞர் முன்னணி கண்டன அறிக்கை!
மணிப்பூரில் நடைபெற்ற பிரச்சனைகள் சம்பந்தமாக கல்லூரியில் பயிலும் மாணவிகளை வைத்து கண்டன பதாகைகளை கொடுத்து பொது இடங்களில் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடத்திலே மனு அளிக்க வைத்துள்ளது மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம்.
தமிழகத்திலே பெண்களுக்கு எதிராக நடைபெற்ற கற்பழிப்பு,கொலை, பேராசிரியர்களால் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பாலியல் சீண்டல்கள், பாவமன்னிப்பு கேட்கச்சென்ற பெண்களை பலாத்காரம் செய்த பாதிரியார்கள் போன்ற தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் எண்ணற்ற அவலங்களையும் துன்புறுத்துதல்களையும் கண்டித்தும் இதனை எல்லாம் கட்டுப்படுத்தாத தமிழக அரசின் திராணியற்ற ஆட்சியின் மீது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிலும் மாணவிகளை வைத்து கண்டன பதாகைகளை எடுத்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் இதுபோன்ற போராட்டம் நடத்தியதுண்டா ?
தமிழக பிரச்சினைகளை பற்றி தமிழக மாணவிகளை வைத்து தமிழக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அமெரிக்க கல்லூரியின் சுயநலத்திற்காக மணிப்பூர் மாநிலம் பிரச்சனைகளை தமிழகத்திலே மத்திய அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டி பேரணி நடத்தி புகார் தெரிவிப்பது என்பது அரசியல் கால் புணர்ச்சியோடும்,உள்நோக்கத்தோடும் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படும் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தை இந்துஇளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே கல்லூரிக்கு படிக்கச் செல்லும் மாணவிகளின் குடும்பத்திற்க்கு தெரியாமல் தங்களது (கல்லூரி) சுயநலத்திற்க்காக கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவிகளை கொடுமைபடுத்தி போராட்டத்தில் ஈடுபடுத்திய மதரீதியாக செயல்படும் மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தின் மீது மதுரை மாவட்ட கல்வி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் போராட்டம் என்ற பெயரில் உள்நோக்கத்தோடு செயல்படும் இதுபோன்ற போராட்டங்களுக்கு கல்லூரியில் பயில செல்லும் மாணவ மாணவிகளை பயன்படுத்த கூடாதென்று தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை உத்தரவு விட வேண்டுமென தமிழக அரசுக்கும், தமிழக கல்வித்துறைக்கும் HYF இந்து இளைஞர் முன்னணிகோரிக்கை வைக்கிறது.
என்றும் தேசியப்பணியில்
P.செல்வகுமார்
இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரை