பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும், பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதை ஏற்க மறுத்தும் ஆளுநரைக் கண்டித்து 16ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் திமுக ஒரு நாடகத்தை நடத்த தயாராகி வருவதையும்,
ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற 66 – வது தேசிய விளையாட்டுப்போட்டிக்கு தமிழக மாணவர்களை அனுப்பாததால் மாணவர்களிடம் ஏற்பட்ட கலங்கத்தை திசைதிருப்பும் வகையில் திமுக செயல்படுவதையும், இந்து இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அரசியல் லாபத்திற்காக மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யும் பித்தலாட்டத்தை மாணவர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் HYF கேட்டுக்கொள்கிறது…